“மாப்ள அவங்க தான்.. ஆனா சட்டை”…. “2029-ல் ராகுல் காந்தி பிரதமர்.. அடுத்த முதல்வர் காங்கிரஸ்காரர் தான்”…. காங்கிரஸ் கூட்டத்தில் வெளியான ஷாக் தகவல்….!

Spread the love

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறுசீரமைப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர்கள் சாமிநாதன் மற்றும் முன்னாள் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் சுரேஷ், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில் தற்போதைய அமைச்சர்களுக்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள்தான் அரசியல் பாடம் கற்றுத் தந்துள்ளதாகவும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இளம் அமைச்சர்களுக்குப் போகப்போகத்தான் அரசியல் பக்குவம் வரும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவின்றி எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனக் காரசாரமாகத் தெரிவித்த சுரேஷ், ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு அளிக்கத் தவறினால் திமுகவினால் சட்டமன்றத்தில் ஐந்து இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்றும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த உண்மை தெளிவாகத் தெரியும் என்பதாலேயே அவர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார் என்றும் சாடினார். மேலும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு கூட்டணி கட்சிகளை திமுக முதுகில் குத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைச் செயல்படுத்தி மாநிலத்தைக் கைப்பற்ற பாஜக தீட்டிய திட்டத்தை முறியடிக்கவே தவெக கட்சிக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகத் தெரிவித்த அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தவெக நிச்சயமாக இந்தியா கூட்டணியில் இடம்பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இறுதியாக, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமராக்கவும், வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதற்கான தீவிர மறுசீரமைப்புப் பணிகள் தற்போது கட்சிக்குள் விரைவாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

1 மணத்தியாலம் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago