தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் களம் தயாராகி வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என மும்முறமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதில் முக்கியமாக விஜய் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு ஆகியவை பரபரப்பாகவே உள்ளது. மற்ற கட்சியின் கூட்டணியை விட தமிழக வெற்றிக்கழகம் உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை நிராகரித்த விஜய் நால்வர் அணியுடன் கூட்டணி அமைப்பார் அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் விஜய்க்கு மிக முக்கிய என்பதால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்ற பல வியூகங்கள் எழுந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கட்சி உடன் கூட்டணி அமைப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம் செய்துள்ளார். அதாவது பாஜகவின் சதி வேலைகளை முறியடிக்க போராடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக இதுவரை விஜய் ஒரு அறிக்கையாவது வெளியிட்டுள்ளாரா? SIR விவகாரத்தில் பாஜக மீது குற்றச்சாட்டு கூட வைக்காத விஜயை காங்கிரஸ்காரர்கள் கூட்டணி வைப்பாக பார்த்தால் அது அவர்களுக்கு சரிவு தான் என்ற விமர்சனம் செய்துள்ளார். இவர் பேசியதை வைத்து பார்க்கும் போது ஏறத்தாழ காங்கிரஸ் விஜய் உடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…