காங்கிரஸுக்கு ‘பை-பை’ சொல்லும் ஸ்டாலின்… அறிவாலயத்தில் நடந்த அந்த ரகசிய மீட்டிங்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக மற்றும் அதன் நீண்டகால கூட்டாளியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியில் பங்கு, ராஜ்யசபா இடங்கள் மற்றும் கூடுதல் தொகுதிகள் என காங்கிரஸ் முன்வைக்கும் அடுக்கடுக்கான கோரிக்கைகள் திமுக தலைமையைத் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட பாஜக அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றது திமுகவை யோசிக்க வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கேட்கும் 30 தொகுதிகளை வழங்க திமுக கறாராக மறுத்து வருகிறது.

மறுபுறம், மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிப்பதாலேயே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுப்பதாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் கருதுகின்றனர். காங்கிரஸுடனான உறவைத் துண்டித்துக் கொண்டால் பாஜகவிடமிருந்து வரும் அரசியல் அழுத்தங்களைக் குறைக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன் பின்னணியில் பாஜகவின் மறைமுக அரசியல் நகர்வுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கூட்டணி விவகாரத்தில் ஒரு தந்திரமான முடிவை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸை தாமாக வெளியேற்றாமல், அவர்களது பிடிவாதமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பதன் மூலம் அவர்களாகவே வெளியேறும் சூழலை உருவாக்க திமுக முயல்கிறது. காங்கிரஸ் வெளியேறினால் மிஞ்சும் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாமக, தேமுதிக போன்ற புதிய கட்சிகளுக்கும், கூடுதல் இடங்களைக் கேட்கும் தற்போதைய கூட்டணி கட்சிகளுக்கும் பகிர்ந்து அளிப்பதன் மூலம் கூட்டணியை வலுப்படுத்தலாம் என திமுக கணக்குப் போடுகிறது.

தற்போதைய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் “காங்கிரஸ் தானாக வெளியேறினால் தடையுமில்லை” என்ற மனநிலையில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, பாஜகவின் நெருக்கடியைச் சமாளிப்பதோடு, உட்கட்சி மற்றும் கூட்டணி குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க திமுக தயாராகி வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியலில் இந்தக் கூட்டணி மாற்றம் பெரும் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

அம்மா உயிரோடு இருக்காங்களா?!”.. வெள்ளத்தில் தவிக்கும் பச்சிளம் குழந்தையின் பகீர் வீடியோ.. கதறும் நெட்டிசன்கள்..!!!

வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…

12 seconds ago

அவதூறு நபரை சந்தித்தாரா ஸ்டாலின்..? தரம் தாழ்ந்த பதிவுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.. தற்போதைய CM விஜய்யின் மாஸ் நடவடிக்கை..!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…

16 minutes ago

2028-ல் மனிதன் அங்கே போவான்.. 5079-ல் உலகம் அழியும்.. பாபா வாங்காவின் அடுத்தடுத்த பகீர் கணிப்புகள்.. உறைந்து போன உலகம்..!!

உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…

17 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! அம்மா உணவகத்திற்குள் நுழைந்த வீணா காயத்ரி… அங்கு நடந்தது என்ன..?!

புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…

27 minutes ago

திமுகவில் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் நிர்வாகிகள்?…. லிஸ்ட்டில் இருக்கும் டாப் தலைவர்கள்… ஸ்டாலினின் ‘ஆபரேஷன் க்ளீன்-அப்’…!

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…

29 minutes ago

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

32 minutes ago