மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் ரத்தோட் (35). இவருக்கு சோனாபூர் தாண்டா கிராமத்தை சேர்ந்த வித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. ஆரம்ப காலத்தில் இருந்தே வித்யா நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பாக, உன்னுடன் வாழ முடியாது என விஜயிடம் கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார், வித்யா. இதனால் ஆத்திரமடைந்த விஜய், தனது செல்போன் whatsapp ஸ்டேட்டஸில் வித்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு, இரங்கல் செய்தியை பதிவிட்டார். இது வித்யா மற்றும் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின் விஜய் தன் மனைவியை சமாதானம் செய்ய, அவர் வீட்டிற்கு சென்ற பொழுது, கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், விஜய் தனது மனைவி வித்யாவை கத்தியால் 12 தடவை குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த வித்யா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், விஜய் கைது செய்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மற்றும் விஜய் தம்பி உள்ளிட்டவர்களை விசாரித்து வருகின்றனர்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…