“இனி இவர்தான் ஜெனரல்…” எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்த முன்னாள் அமைச்சர்கள்…. டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷா எடுக்கப்போகும் முக்கிய முடிவு…!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக வரலாறு காணாத அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தது மட்டுமன்றி, சட்டப்பேரவையில் பெற்றிருந்த எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. இந்தச் சூழலால் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான நிர்வாகிகள் தீவிர அதிருப்தியடைந்து, தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். பலர் ஆளுங்கட்சியான திமுகவிலும், புதிதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்திலும் (தவெக) இணைந்து வருகின்றனர்.

அதிமுகவின் இந்தத் தொடர் சரிவுக்கும் பிளவுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே முதன்மையான காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்து தவெகவில் இணைந்துள்ள நிலை உருவாகியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், வைகைச்செல்வன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும் தவெக பக்கம் சாய்ந்திருப்பது கட்சிக்குக் பலத்த அடியாக அமைந்துள்ளது.

அதேவேளையில், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி அன்பழகன் போன்ற மூத்த தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதாவைப் போல பாவித்துக்கொண்டு செயல்படுவதாகக் கூறி, அவருக்குப் பதிலாகப் புதிய பொதுச்செயலாளரை நியமிக்கக் கோரி சில முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று பாஜக தலைமையிடம் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைத்தன்மையற்ற அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது பெரும் தோல்வியைத் தரும் என்றும் அவர்கள் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் பணிகளில் பாஜக தலைமை தீவிரமாக இருப்பதால், இந்த விவகாரத்தைச் சில நாட்களுக்குப் பிறகு கையாளலாம் என்ற முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தனக்கெதிராகக் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அலைமோதும் இந்தச் சூழலிலும், எடப்பாடி பழனிசாமி எந்தவித அதிரடி நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது அவரது ஆதரவாளர்களையே பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நிர்வாகிகள் அனைவரும் இணைந்து செயல்படக் கொடுத்த ஆலோசனைகளையும் அவர் புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago