ஹிந்தி பிக் பாஸ் வெற்றியாளரும் யூட்யூபருமான எல்விஷ் யாதவ் ரேவ் பார்ட்டிகளை நடத்தியுள்ளார். அந்த பார்ட்டியில் ஸ்நேக் பைட் எனப்படும் போதை பொருளை கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எல்விஷ் யாதவ் ஏற்பாடு செய்த ரேவ் பார்ட்டியில் விஷ பாம்புகளை சப்ளை செய்ததாக கூறி கௌதம் புத்த நகர் போலீசார் ஐந்து பேரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ரேவ் பார்ட்டிகள் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எல்விஷ் யாதவ் யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுக்க பாம்புகளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் போலீசாரிடம் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்து நாகப்பாம்புகள் உட்பட 9 பாம்புகள், 20 மில்லி பாம்பு விஷம் மீட்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீண்ட நாளாகவே பாஜகவை சேர்ந்த மேனகா காந்தி எல்விஷ் யாதவ் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். ஏனென்றால் மேனகா காந்தியால் நடத்தப்படும் விலங்குகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனமான பீப்பிள் பார் அனிமல்ஸ் என்ற அமைப்பில் இருந்து கிடைத்த தகவலின் படி நொய்டாவின் செக்டர் 51-ல் நடத்தப்பட்ட ரேவ் பாட்டிலில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எனவே எல்விஷ் யாதவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தினார். மறுபுறம் எல்விஷ் யாதவ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும் காவல்துறைக்கு ஒத்துழைக்க தான் தயாராக இருப்பதாகவும் எல்விஷ் யாதவ் சமூக வலைதளத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…