மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள அம்பர்நாத்தில் வசித்து வந்தவர் அர்னவ் கெய்ரே (19). முலுண்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், வழக்கம் போல் புறநகர் ரயிலில் பயணம் செய்தபோது, துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அம்பர்நாத்திலிருந்து சி.எஸ்.டி. நோக்கிச் செல்லும் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கெய்ரே முன்னால் நின்ற சக பயணியிடம் இந்தியில், “சற்று முன்னால் செல்லுங்கள்” என்று கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் மராத்தி என்பதால், “ஏன் இந்தியில் பேசுகிறாய்? உன் தாய்மொழியில் பேசுவதில் உனக்கு அவமானமா?” என்று கேட்டு கெய்ரேயிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
தானும் மராத்திதான் என்று கெய்ரே விளக்கியபோதும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றி, சக பயணிகள் அவரைச் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பயந்துபோன கெய்ரே, தனது தந்தைக்குத் தொலைபேசியில் அழைத்து, “சிலர் என்னைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், பயமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவர் தானே ரயில் நிலையத்தில் இறங்கி, வேறு ரயில் மூலம் முலுண்ட் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆனால், கல்லூரி வகுப்புகள் எதிலும் கலந்து கொள்ளாமல், நேராக வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு, தனது அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலை முடிந்து தாமதமாக வந்த அவரது தந்தை, மகன் அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவைத் திறந்தபோது, மகன் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…