கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ். இவரது மகன் ஷர்மிளா. இவர் வி.வி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் இவர்தான் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார்.
கோவை காந்திபுரம் to சோமனூர் வழியில் பேருந்தை இயக்கி வரும் ஷர்மிளா என்ற பெண் ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் வளர்ந்துள்ளார்.
தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.
கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த சம்பவம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…
திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…
தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…