“செங்கோட்டையன் அடுத்து ஆதவ்”… முதல்வர் விஜய் திடீரென அமைச்சர்கள் இருக்கைக்குச் சென்றது ஏன்?…. கசிந்த ரகசிய தகவல்….!

Spread the love

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சட்டசபையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. வார விடுமுறைக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தொடரில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக, முதல்வர் விஜய் சட்டசபையில் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து, அமைச்சர்களின் இருக்கையில் சென்று அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் இருக்கையில் அமர்ந்த முதல்வர், அருகே இருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் நீண்ட நேரம் விவாதித்தவாறே சபையின் நிகழ்வுகளை உற்று நோக்கினார்.

இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பும், பிற்பகலுக்கு மேல் சட்டசபைக்கு வந்த முதல்வர் விஜய், தனது இருக்கைக்குச் செல்லாமல் அமைச்சர் அருண்ராஜின் இருக்கையில் அமர்ந்தார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே அமர்ந்துகொண்ட அவர், செங்கோட்டையனுடன் மிகவும் தீவிரமாக ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை நடத்தினார். சட்டசபை வரலாற்றிலேயே ஒரு முதல்வர் தனது பிரத்யேக இருக்கையில் அமராமல், சபை முடியும் வரை அமைச்சர்களின் இருக்கையில் அமர்ந்து அவையைக் கவனிப்பது இதுவே முதன்முறை என்பதால் இது பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாக சட்டசபையில் சபாநாயகர் மற்றும் முதல்வருக்குத் தனி சிறப்பு இருக்கைகளும், மற்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் மூப்பு மற்றும் அகரவரிசைப் படியும் இருக்கைகள் ஒதுக்கப்படுவது வழக்கம். எம்.எல்.ஏ-க்கள் பேசும்போது தற்காலிகமாக இருக்கை மாறுவது இயல்பு என்றாலும், முதல்வர் அமைச்சர்களின் இடத்திற்கே சென்று அமர்ந்தது சமூக வலைதளங்களில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அவையில் எழுந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தாரா அல்லது துறை சார்ந்த முடிவுகள் குறித்துப் பேசினாரா எனப் பல ஊகங்கள் எழுந்தாலும், முதல்வரின் இந்த எளிமையான அணுகுமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Nanthini

Recent Posts

“லைவ் ஸ்ட்ரீமில் பயங்கரம்…!” முகத்தில் குத்து… பாட்டில் வீச்சு… பெண் ஸ்ட்ரீமரை சரமாரியாக தாக்கிய பிரபல கேமர்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற 'SeeEx' என்ற பிரபல கேமிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சியின் போது, பிரபல ஸ்ட்ரீமரான…

59 seconds ago

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

1 மணத்தியாலம் ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

1 மணத்தியாலம் ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

1 மணத்தியாலம் ago

26 வயது இளைய மனைவி… சாப்பாட்டில் தூக்க மாத்திரை… எஸ்.ஐ ராஜ் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்த உண்மை….!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் (SI) ராஜ் (58)…

1 மணத்தியாலம் ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

2 மணத்தியாலங்கள் ago