விஜய்யின் சிறை விசிட்… ஆய்வு அரசியலா? அல்லது தோஷ பரிகாரமா?….. பரபரக்கும் தமிழ்நாடு…. வழக்கறிஞர் உடைத்த பகீர் உண்மை….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் புழல் சிறைக்கு முதல்வர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வுப் பயணம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிறைக் கைதிகளின் வசதிகள், பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை நேரில் கேட்டறிந்த அவர், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவையும் சுவைத்துப் பார்த்தார். தமிழக வரலாற்றில் இதற்குமுன் எந்த ஒரு முதல்வரும் சிறைக்குள் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியதில்லை என்ற சூழலில், விஜய்யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான கண்ணதாசன் அளிக்கையில், ஒரு முதல்வர் சிறையைப் பார்வையிடுவதில் தவறில்லை என்றாலும், விஜய்யின் இந்த வருகைக்குப் பின்னால் ஜோதிட ரீதியான பரிகாரக் காரணங்கள் இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் திரைப்பிரபலங்களும் எதிர்காலத்தில் வரக்கூடிய சிறைத் தண்டனைகளைத் தவிர்க்க அல்லது தோஷங்களைக் கழிக்க சிறைக்குச் சென்று உணவருந்தி வருவது வழக்கம் என்றும், அந்த வகையிலேயே விஜய்யும் இந்த விஜயத்தை அமைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த கால வரலாற்றை ஒப்பிட்டுப் பேசிய அவர், 2003-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புழல் சிறைக்கு அடிக்கல் நாட்ட வந்தபோது ஹெலிகாப்டரில் மைதானத்திலேயே இறங்கிச் சென்றாரே தவிர உள்ளே செல்லவில்லை என்றார். அதேபோல் 2006-இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைத்தபோதும் சிறைக்குள் செல்லவில்லை. ஆனால், விஜய் 2002-லேயே சென்னை மத்திய சிறைக்குச் சென்று பிரியாணி வழங்கியதையும், தற்போது இரண்டாவது முறையாக புழல் சிறைக்குள் சென்றிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், புழல் சிறையில் உள்ள விசாரணைச் சிறை, தண்டனைச் சிறை, பெண்கள் சிறை ஆகிய மூன்றில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் கைதிகள் உள்ள தண்டனைச் சிறையை மட்டுமே அவர் பார்வையிட்டது வருத்தமளிப்பதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். பார்வைப்படிக்கு வைக்கப்படும் உணவையே அவர் சுவைத்துள்ளார் என்றும், மற்ற இரு சிறைப் பிரிவுகளையும் அவர் பார்வையிடத் தவறிவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார். எதுஎவ்வாறாயினும், தமிழக அரசியல் சூழலில் முதல்வரின் இந்த திடீர் சிறை வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 minutes ago

BREAKING: 7 முதல் 16 வயது சிறுமிகளுடன்… சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்…. போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்….!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

23 minutes ago

“கடல் பார்த்த ஆபீஸ் யோகமா?”…. ரூ.1,200 கோடி திட்டத்திற்குப் பின் இருக்கும் ஜோதிடக் காரணம்…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்….!

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…

33 minutes ago

பீகாரை அலறவிட்ட சம்பவம்… சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… என்கவுண்டரில் தூக்கிய அதிரடி போலீஸ்….!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…

42 minutes ago

அடேய் என்னடா பண்றீங்க…. ஒரே பைக்கில் 4 பேர்… தோள் மீது உட்கார்ந்து நடுரோட்டில் ஆபத்தான சாகசம்….. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…

50 minutes ago

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

55 minutes ago