“ஆடு திருடு போகல, கனவு கண்டேன்”… CM விஜய் பதவி விலகத் தயாரா?….. புதிய பரபரப்பை கிளப்பிய நயினார்….!

Spread the love

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) நடைமுறைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சேர்ந்து குரல் கொடுப்பது அரசியல் ரீதியான முரண்பாடாக பார்க்கப்படுகிறது. எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பிறகுதான் தமிழகத்தில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் நிலையில், அதே நடைமுறையை எதிர்ப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பின் பதவியேற்றவர்கள் அனைவரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை தவெக ஏற்றுக்கொள்கிறதா என்ற வலுவான கேள்சியை நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார்.

மக்களவை, சட்டமன்றம் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, தங்களது கையாலாகாத்தனத்தை மறைக்க தேர்தல் ஆணையத்தின் மீதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீதும் வீணாகப் பழிபோடுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான முறையான ஆதாரங்களும் இன்றி ‘வாக்கு திருட்டு’ நடந்துள்ளதாக ராகுல் காந்தி மழுப்பலான கருத்துக்களைத் தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பாஜக, போலி வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்கி முறையான ஜனநாயகத்தை நிலைநாட்டும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன் என்ற நியாயமான கேள்சியை முன்வைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்தை ஆதரித்து எஸ்ஐஆருக்கு எதிராக தவெக போர்க்கொடி தூக்குவது தற்கொலைக்குச் சமமான அரசியல் பிழை என்றும், அப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்டால் “நான் ஒரு சட்டவிரோத முதல்வர்” என்பதை ஒப்புக்கொண்டு முதல்வர் விஜய் பதவி விலகத் தயாரா என்றும் நயினார் நாகேந்திரன் காட்டமாகச் சவால் விடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

3 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

17 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

25 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

49 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

57 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

1 மணத்தியாலம் ago