லண்டனில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த செய்திக்குறிப்பு ஒன்று, தற்போது மாநில அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. லண்டன் பயணத்தின் போது முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ் நிகழ்வுகளில் பங்கேற்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், அதற்குப் பதிலாக 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் ₹12,000 கோடி முதலீடு மற்றும் சுமார் 9,600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற தகவல் பெரும் வரவேற்பைப் பெற வேண்டிய சூழலில், செய்திக்குறிப்பில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட விவரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஸ்வீடனின் ‘சிக்மா டெக்னாலஜி குரூப்’ நிறுவனம் சென்னை மற்றும் திருச்சியில் தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல, ‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சுமார் ₹11,000 கோடி முதலீட்டில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களின் பெயர்கள், முதலீட்டுத் தொகை மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது ஒப்பந்தம் குறித்த விவரிப்பு தான் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சுமார் ₹1,000 கோடி முதலீட்டில், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சென்னையில் புதிய மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட நிறுவனத்தின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படாமல், “இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம்” என்று மட்டுமே செய்திக்குறிப்பில் மொட்டையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் இணைந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் பெரிய முதலீட்டைச் செய்ய முன்வரும் ஒரு முன்னணி நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைப்பது ஏன் என்று நெட்டிசன்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டிய அரசு செய்திக்குறிப்பில் நிறுவனத்தின் பெயர் மறைக்கப்பட்டது குறித்த சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில், இது தொடர்பான கூடுதல் விளக்கங்களை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகக் கடல் வழித்தடமாகத் திகழும் கருங்கடல் பகுதியில், 23 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த…
சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் பகுதியில் மின்கம்பிகளில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பிற பத்திரப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவோ…
பெற்றோர்களின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தகைய பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று…
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…