கண்ணதாசனுக்கு பிறகு எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞராக மாறிய கவிஞர் வாலி எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் எழுதிய ஒரு பாடலுக்கு சென்சார் அதிகாரிகள் பலத்தை எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த இடத்திலேயே அத்தனை மாற்றத்தையும் உடனடியாக செய்து படத்திற்கு சென்சார் வழங்கியுள்ளனர் என்பது இன்றுவரை பலரும் அறியாத ஒரு தகவல் தான். 1964 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராமுடு பீடுமு என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய தயாரிப்பாளர் நாகிரெட்டியார் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிக்க எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயரில் இந்த திரைப்படத்தை இயக்கினார். இயக்குனர் சாணக்கியர் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் டி கே ராமமூர்த்தி இருவரும் இசையமைத்த நிலையில் கவிஞர் வாலி உள்ளிட்ட பலரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
அப்போதுதான் இந்த திரைப்படத்தில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் வரும், பாடலை முதலில் நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என்று தான் வாலி எழுதியுள்ளார். படம் சென்சாராக போகும்போது இந்த வரிகள் சரிவராது மாற்றங்கள் என்று சொல்ல தயாரிப்பாளர் நாகி ரெட்டி வாலி இடம் கூறியுள்ளார். ஆனால் எம்ஜிஆர் சொல்லாமல் நான் எதையும் மாற்ற மாட்டேன் என்று வாலி கூறியுள்ளார். அதன் பிறகு எதை மாற்ற வேண்டுமோ அதை மாற்றி விடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்ல வாலி அத்தனை மாற்றத்தையும் உடனடியாக செய்துள்ளார். அதன்படி நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்ற வரிகளை மாற்றி விட்டு நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று மாற்றியுள்ளார்.
அதனை போலவே எதிர்வரும் காலம் வரும் என் கடமை வரும் இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று எழுதி இருந்தார். அப்போது திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை காக்கைகள் என்ற விமர்சித்து இருந்ததால் அந்த வரிகளை மாற்றவும் கூறியுள்ளனர். இதனால் அந்த வரி, எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றினார். இந்தப் பாடலில் 75 சதவீதம் வரிகள் மாற்றம் செய்யப்பட்டதால் முதலில் இருந்ததைப் போல் பெரிதாக எடுபடாது என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் பாடலின் அனைத்து வரிகளும் பெரிய ஹிட் அடித்து பலரின் ஃபேவரிட் பாடலாக மாறியது. இன்றும் எம்ஜிஆர் குறித்து எந்த நிகழ்ச்சி என்றாலும் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…