தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆரம்பக் கட்ட முடிவுகள் ஆளும் திமுக அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், கீதா ஜீவன், ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட திமுகவின் ‘ஸ்டார்’ வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஆளுங்கட்சியின் முக்கிய முகங்களே தபால் வாக்குகளில் பின்தங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டையாகக் கருதப்படும் கொளத்தூர் தொகுதியில் முதல் சுற்று முடிவிலேயே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை பெற்றுள்ளது. முதல் சுற்றின் இறுதியில் தவெக 4,130 வாக்குகளைப் பெற்று முதலிடத்திலும், திமுக 3,244 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக 1,200 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதேபோல், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக தலைவர் விஜய், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை விட 507 வாக்குகள் முன்னிலை பெற்று அசத்தியுள்ளார்.
தமிழக அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தவெக, ஆரம்பத்திலேயே முதலமைச்சரின் தொகுதியிலும், சென்னையின் முக்கியப் பகுதிகளிலும் முன்னிலை பெற்று வருவது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் வெற்றி வாய்ப்புகள் மங்கத் தொடங்கியுள்ள இந்தச் சூழல், தமிழகத் தேர்தல் களம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்வதையே காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் களத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக போன்ற ஒரு பேரியக்கம், விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே…
கடந்த காலத்தின் நினைவுகள் எப்போதும் ஒருவிதமான ஏக்கம் கலந்த இனிமையை நமக்குத் தருகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சி இன்று அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தி.மு.க-வின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக்…
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்ற வசனத்திற்கு முற்றிலும் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்…
பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச்…