ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இரும்பால் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் சுமார் 1315 மீட்டர் நீளமுடையது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த சூறைக்காற்று சூழலை தாங்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம் உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவுபாலமாகும். இது ஆற்று படுகையில் இருந்து 359 மீட்டர் உயரமும், ஈபில் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்டது.
இது ரிட்டர் அளவுகோலில் எட்டு அளவு வரை நிலநடுக்கங்களை தாங்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செனாய் நதியின் ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படாமல் கட்டுமானம் முடிக்கப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் வரை நீடிக்க கூடியதாக இந்த ரயில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும் திறனுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 8 ரைட்டர் அளவுகோல் வரையிலான பூகம்பங்களை தாங்கும். இந்த பாலத்திற்கு எந்த சேதாரமும் ஏற்படாது. 40 டன் டிஎன்டி வெடிப்பு தாங்கும் சக்தியும் கொண்டது. இந்த பாலத்தின் மீது ரயில்கள் செல்லும்போது சாகச பயணம் போல இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றன.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…