இனி பிறந்த குழந்தைகளுக்கும் பென்ஷன்… 80% விதி காலி.. 0 வயதிலிருந்தே உதவித்தொகை…. மத்திய அமைச்சரவையின் ரூ.53,428 கோடி ஜாக்பாட் திட்டம்…!

Spread the love

மத்திய அரசின் தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய விதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தளர்வுகளை வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 80 சதவீத பாதிப்பு இருந்தால்தான் ஓய்வூதியம் பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி 40 சதவீத அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்தால் ஓய்வூதியம் பெறத் தகுதியடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம் வயது வரம்பும் முழுமையாகத் தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது, தகுதியுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறந்தது முதலே, அதாவது 0 வயதிலிருந்தே இந்த உதவியைப் பெறும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 0 முதல் 79 வயது வரையிலானோருக்கு மாதம் ரூ.375-ம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மாதம் ரூ.625-ம் உதவித்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டமானது 2026-27 முதல் 2030-31 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளதுடன், இதற்காக ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3.20 கோடி ஏழை மக்கள் இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புதிய தகுதி விதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விரிவான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இன்னும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயனாளிகள் புதிய அரசாணை மற்றும் முறையான அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருந்து, அதன் பிறகு உரிய முறையில் விண்ணப்பித்து இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Nanthini

Recent Posts

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

41 seconds ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

21 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

24 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

33 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

38 minutes ago