Categories: சினிமா

புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கைது.. ராஷ்மிகா முதல் வருண் தவான் வரை கொந்தளித்த பிரபலங்கள்..!

Spread the love

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியானதற்கு முதல் நாள் ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் முதல் காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்த அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி உதவியும் அறிவித்திருந்தார். இந்த சம்பவத்தால் தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று காலை அல்லு அர்ஜுனை கைது செய்தனர்.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவர்கள் பிறகு அல்லு அர்ஜுன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அதன்படி தெலுங்கு நடிகர் நானி அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள், சினிமா துறையை சார்ந்தவர்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை சாதாரண குடிமக்கள் மீதும் காட்ட வேண்டும். நடந்த சம்பவம் ஒரு பேரதிர்ச்சியான சம்பவம்தான். மீண்டும் இப்படி நடக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தனிப்பட்ட ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று பதிவிட்டுள்ளார்.

அதனைப் போலவே ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பெண்ணின் மரணம் அந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அல்லு அர்ஜுன் இதற்கு வருத்தம் தெரிவித்ததுடன் குடும்பத்திற்கு ஆதரவாக நிற்பதாக கூறி பொறுப்புடன் நடந்து கொண்டார். இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு அவரை நேரடியாக பொறுப்பாக்குவது எப்படி நியாயம். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதனைப் போலவே  ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது பார்ப்பதை நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானதுதான். வருத்தமானதும் கூட. அதற்காக எல்லா பழியையும் தனிப்பட்ட ஒருவர் மேல் சுமத்துவது வருத்தமளிக்கிறது. இப்படியொரு நிலைமை நம்ப முடியாததாகவும் வேதனையாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் வருண் தவான் ஆகியோரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகரும், முன்னாள் அமைச்சருமான சிரஞ்சீவி, விஸ்வபாரா படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

5 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

9 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

18 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

28 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

36 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

55 minutes ago