Categories: சினிமா

49-வது பிறந்தநாளை கொண்டாடிய தளபதி விஜய்… வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்… வெளியான புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய்.

இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரைப்பட இயக்குனர். அதனைப் போலவே தாயார் சோபாவும் பின்னணி பாடகி ஆவார்.

விஜய் தன்னுடைய 10 வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய 18 வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் தன்னுடைய தந்தை இயக்கத்தில் நடித்து வந்த விஜய் முதன் முறையாக ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படத்தில் அஜித்தும் நடித்திருந்தார்.

விஜய் திரைத்துறைக்கு வந்த போது தொடர்ந்து பல படங்கள் தோல்வியை கொடுத்தாலும் காதல் சம்பந்தமான படங்களில் விஜய் வெற்றி கண்டார்.

இளைய தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். இதுவரை விஜய் 66 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனிடையே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை லியோ திரைப்படத்தின் பாடல் ஒன்றை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் விஜையுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Archana

Recent Posts

BREAKING: தேர்தல் முடிந்த உடன்.. திருமா அதிரடி மாற்றம்… காலையிலேயே ஷாக்…!

தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…

4 minutes ago

“அது நீறு பூத்த நெருப்பு”… ஆளுங்கட்சியை அலறவிடும் 85% வாக்குப்பதிவு… ஸ்டாலினுக்கு மரண அடி?… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அந்த ரகசிய அறிக்கை…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

“உன்னைப் பார்த்தா எனக்கு அந்த உணர்வே வரல”… ஐடி மாப்பிள்ளை சொன்ன காரணம்… ஆளுநரிடம் கோல்ட் மெடல் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…

21 minutes ago

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

22 minutes ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

25 minutes ago

“சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமருக்கு வந்த கொடூர நோய்”… இரண்டு மாதங்களாக இஸ்ரேல் காத்து வந்த பேரதிர்ச்சி ரகசியம்…!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…

26 minutes ago