பெங்களூருவில் உள்ள பிரபல ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரின் பையிலிருந்து நயவஞ்சகமாகப் பணப்பையைத் திருடும் பெண் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. மதிய வேளையில் கடையில் நிலவிய கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அருகில் அமர்ந்திருந்த நபர் யாருடைய கவனமும் இல்லாத நேரத்தில் பையைத் திறந்து கைவரிசை காட்டியுள்ள இந்த அதிர்ச்சி சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை முழுமையாகக் கைப்பற்றி தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்மப் பெண் யார், வேறு எங்கு இதுபோன்று கைவரிசை காட்டியுள்ளாரா என்ற கோணத்தில் குற்றப்பிரிவு போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இது போன்ற காபி ஷாப்புகள் மற்றும் உணவகங்களில் தனிநபர்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மக்கள் தங்கள் கைப்பைகள் மற்றும் விலைமதிப்பபான பொருட்களை எப்போதுமே தங்களின் அருகிலேயே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் கோரப்படுவதாகக் கூறப்படும்…
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில், மடத்துக்குளம் அருகே உள்ள…
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் விசிக கட்சிகளை மையமாகக் கொண்டு புதிய கூட்டணி நகர்வுகள் தொடர்பான தகவல் அரசியல்…
உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் கர்பா நடனமாட வந்த பெண் இன்ஃப்ளூயன்சருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும்…
தெலங்கானாவின் மேட்சல்- மல்காஜ்கிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிவேகமாக வந்த யமகா ஆர்15 மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது…
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மார்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மகா அஷ்டமி நாளான அக்டோபர்…