தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கமலா நகர் பகுதியில், மதுபோதையில் அதிவேகமாகச் சொகுசு காரை ஓட்டி வந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் கூட்டத்திற்குள் காரை மோதி பெரும் கொடூர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பவன் என அடையாளம் காணப்பட்ட அந்த மென்பொருள் பொறியாளர், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனத்தைக் கட்டுப்பாடின்றி இயக்கியுள்ளார். கமலா நகர் பகுதியில் கார் திடீரெனத் தறுமாறிச் சென்று அங்கிருந்த மக்கள் மீது சடசடவென மோதியதில், 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் கடுமையான காயங்களுடன் இரத்தக்களறியாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நரநடுங்கும் விபத்தின் அதிர்ச்சித் தரும் நேரடிக் கண்காணிப்புக் கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய மென்பொருள் பொறியாளர் பவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…