Categories: CINEMA

“கடைசியா அக்கா பொண்ணு விசேஷத்துக்கு… அவர் இல்லாம நாங்க..” விஜயகாந்த் மறைவு குறித்து சகோதரர் உருக்கம்…

தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனைகளைக் கட்டினார். தனக்கு நெருக்கமானவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி, முன்பின் தெரியாத ஏராளமானோருக்கும் உதவிகளைச் செய்தவர்.

விஜயகாந்தின் தந்தை அழகர்சாமிக்கு, ஆண்டாள், ருக்மணி என இரு தாரங்கள். அவர்களில் ஆண்டாள் அம்மாளின் மகன் தான் விஜயகாந்த். விஜயகாந்த்துடன் பிறந்தவர்கள் விஜயலட்சுமி, நாகராஜன், திருமலாதேவி ஆகியோர். ருக்மணி அம்மாளுக்கு பிறந்தவர்கள், செல்வராஜ், பால்ராஜ், சித்ராதேவி, ராம்ராஜ், மீனாகுமாரி, சாந்தி, பிருத்விராஜ் என 7 பேர்.

சினிமாவில் சாதித்து பணம் சம்பாதித்த பிறகு, தனது மாற்றாந்தாய் பிள்ளைகளுக்கும் விஜயகாந்த் முன் நின்று பல உதவிகளையும் செய்துள்ளார். தனது அனைத்து சகோதர, சகோதரிகளின் திருமணத்தையும் நல்ல முறையில் நடத்தி வைத்தார். தனது இளைய சகோதரர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தார் விஜயகாந்த்.

#image_title

தனது எல்லாத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்தபோது விஜயகாந்துக்கு 37 வயதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் பிரேமலதாவைக் கைபிடித்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ பட்டதாரியான பிரேமலதா, விஜயகாந்த்தின் தீவிர ரசிகை. பிரேமலதா- விஜயகாந்த் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பலவருடங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த் இன்று காலமானார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும், தொண்டர்களும் என என மொத்த தமிழகமே சோகத்தில் . இந்நிலையில் அவரது சொந்த ஊரில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் சகோதரர் ‘ எல்லாருக்கும் உதவி செய்வாரு. ஆனா அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமா சரியா மதுரைக்கு வரல. கூட்டம் கூடிடும் அப்புடின்னு லாட்ஜுக்கு வர சொல்லி எங்கள விசாரிப்பாரு. அப்பா தெவசத்துக்கு கூட அண்ணன் வந்தாரு” என்று கலங்கிய கண்களுடன் பேட்டியளித்துள்ளார். இதோ அந்த வீடியோ…

“அப்பா தெவசத்துக்கு கூட வந்துட்டு போனாரு..”

Begam

Recent Posts

அந்த நடிகையும் இல்ல, இந்த நடிகையும் இல்ல.. ஜீ தமிழ் சீரியலில் ஏற்பட்ட குழப்பம்.. கடைசில எண்டு கார்டு போட்டதுதான் மிச்சம்..!

தமிழ் சினிமாவில் பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் பல இல்லத்தரசிகள்…

55 mins ago

10,000 கேட்டு இல்லன்னு சொன்ன வத்சலா.. 4 நாட்களுக்குப் பிறகு நடிகை சாந்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நல்ல உள்ளம்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது. கோயம்புத்தூரில் பிறந்து…

2 hours ago

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

17 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

17 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

17 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

19 hours ago