#image_title
கவின் என்று அழைக்கப்படும் கவின்ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களில் இவரும் ஒருவர். விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் கவின்.
பின்னர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கப்பெற்ற கவின் சத்ரியன் நட்புன்னா என்னன்னு தெரியுமா டாடா ஆகிய படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
டாடா திரைப்படம் கவினுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக இவர் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியானது. தற்போது தீபாவளிக்கு கவின் நடித்த பிளடி பக்கர் திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து கவின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் கவின் ரசிகர்கள் தம்மிடம் கேட்டதை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் விஜய் அரசியலுக்கு போயிட்டாரு அஜித் கார் ரேஸ்க்கு போயிட்டாரு அவங்க இடத்துக்கு நீங்க வருவீங்களான்னு கேக்குறாங்க. ஒரு நாலஞ்சு படம் பண்ணிட்டோம்னா அவங்க இடத்தை பிடிக்க முடியுமா? அப்படி யோசிக்கலாமா? அவங்க ரெண்டு பேரும் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவங்க இந்த இடத்திற்கு வர்றத்துக்கு எவ்வளவு உழைச்சு இருப்பாங்க. என்ன பொறுத்த வரைக்கும் நல்ல படங்களா மக்கள் ரசிக்கிற மாதிரி படங்கள் கொடுத்தா போதும் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் கவின்.
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…