“கொலைக்குச் சமமான மரணம்…” பிணையில் வரமுடியாத சட்டப்பிரிவில் கைதான தொழிலதிபர்…! அதிரடி பின்னணி…!!

Spread the love

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாகச் சொகுசு கார் ஓட்டி, ஆட்டோ ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான நிசாந்த் என்ற 27 வயது தொழிலதிபர் மீது கொலைக்குச் சமமான மரணம் விளைவித்தல் என்ற கடுமையான பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 14-ஆம் தேதி வடபழனி சாலையில் ஆட்டோ மீது மோதிய விபத்தில், 60 வயதான பாஸ்கர் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய தொழிலதிபரைச் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட தனிப்படை போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

சாதாரண சாலை விபத்து வழக்காக இல்லாமல், மது அருந்தினால் விபத்து ஏற்படும் என்று தெரிந்தே செயல்பட்டதால் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105-ன் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதோடு, இது பிணையில் வெளிவர முடியாத பிரிவாகும். மது அருந்திவிட்டு அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது போன்ற கடுமையான சட்டப் பிரிவுகள் எச்சரிக்கையாக அமையும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago