“என் பெயர் எங்கப்பா?”… தம்பி கார்த்தியை நக்கல் செய்த அண்ணன் சூர்யா.. ஆர்ஜே பாலாஜியின் கலக்கல் ரிப்ளை..!!!

Spread the love

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு சிறப்பான வெற்றிப்படம் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இப்படம் விரைவாக ரூ. 100 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார். அதில் சூர்யாவின் பெயரைக் குறிப்பிடாமல், “கருப்பா… இதுக்கு மேல என்ன வேண்டும்?” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்தப் பதிவில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோரின் பெயர்களை மட்டுமே கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தம்பியின் அந்தப் பதிவைப் பகிர்ந்த நடிகர் சூர்யா, “என் பெயர் எங்கப்பா?” எனக் கிண்டலாகக் கேட்டு கார்த்தியைக் கலாய்த்துள்ளார். அண்ணன் சூர்யாவின் இந்தக் கேள்விக்கு ஆர்ஜே பாலாஜியும், “கருப்பான்னு யாரைச் சொல்லியிருக்கார் சார்?” என நகைச்சுவையாகப் பதிலளிக்க, சூர்யா-கார்த்தி சகோதரர்களின் இந்த சுவாரசியமான சமூக ஊடக உரையாடல் தற்போது ரசிகர்களால் இணையத்தில் பயங்கரமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.

Muthu Mani

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

9 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

9 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

10 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

10 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

10 மணத்தியாலங்கள் ago