காப்பீட்டு பணத்திற்காக சொந்த அண்ணனை லாரி ஏற்றிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மங்கோடி நர்ஸய்யாவுக்கு மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும் மங்கோடி நரேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் வெங்கடேஷுக்கு திருமணமாகவில்லை. அவரது மனநிலையும் சரியில்லை. நரேஷ் 2 டிப்பர் வண்டி வாடகைக்கு விட்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தும் வருகின்றார். இதில் 1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டு கடன் வந்துள்ளது.
கடனை அடைப்பதற்காக தன்னுடைய அண்ணன் வெங்கடேஷ் பெயரின் பல்வேறு காப்பீடு நிறுவனத்தில் 4.14 கோடி மதிப்புள்ள காப்பீடு எடுத்துள்ளார். வெங்கடேஷ் இறந்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும், இதன் மூலமாக கடனை அடைத்து விடலாம் என்று வெங்கடேஷை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக நரேஷ் தன்னுடைய நண்பருக்கு 7.50 லட்சம் கடன் கொடுக்க வேண்டியுள்ளதால் கொலைக்கு ஒத்துழைத்தால் கடன் தொகையுடன் சேர்த்து 13 லட்சம் தருவதாக கூறியுள்ளார். டிப்பர் டிரைவருக்கு இரண்டு லட்சம் தருவதாகவும் இந்த திட்டம் வெளியே தெரிந்தால் அனைவரும் சிறைக்கு செல்வோம் என்று வீடியோ எடுத்துக் கொண்டு வெங்கடேஷை கொலை செய்ய முடிவு செய்தார்.
திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு நரேஷ் தன்னுடைய டிப்பரில் மண்ணை நிரப்பிவிட்டு திரும்பி வருமாறு ஓட்டுனரிடம் கூறிய நிலையில் இரவு பத்து மணிக்கு டிப்பர் வந்தவுடன் ஓட்டுநர் பிரதீப் நரேஷை அழைத்து முன்கூட்டியே செய்த திட்டத்தின் படி வாகனம் பழுதடைந்ததாக கூறினார். நரேஷ் உடனடியாக வெங்கடேஷுக்கு ஒரு ஜாக்கியை கொடுத்து ஸ்கூட்டியில் டிப்பர் இருக்கும் இடத்திற்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு நரேஷ் தனது நண்பர் ராகேஷ் உடன் வேறு ஒரு வாகனத்தில் சென்று வெங்கடேஷிடம் ஜாக்கியை லாரி டயருக்கு அடியில் வைக்கச் சொன்னார். வெங்கடேஷ் ஜாக்கியை டயருக்கு அடியில் வைத்து திரும்பிக் கொண்டிருந்தபோது நரேஷ் டிப்பரை முன்னோக்கி ஓட்டிச் செல்லக் கூறியதால் டிரைவர் பிரதீப் டிப்பரை முன்னோக்கி ஒட்டியதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.
பிறகு நரேஷ் தன்னுடைய குடும்பத்தினரிடமும் போலீசாரிடமும் டிப்பர் ஓட்டுநர் பிரதீப்பின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாகவும் வெங்கடேஷ் இறந்து விட்டதாகவும் கூறினார். அதே சமயம் இரண்டு நாட்கள் கழித்து காப்பீட்டு நிறுவனத்தினர் இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் மூவரும் சேர்ந்து திட்டமிட்டு வீடியோ எடுத்து காப்பீட்டு பணத்திற்காக வெங்கடேஷை கொலை செய்தது தெரியவந்தது. தற்போது மூன்று பேரையும் போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…