சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியலில் போஸ் கேரக்டரில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் வெங்கட். இன்று போஸ் வெங்கட், ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவ்வப்போது ஒரு சினிமா கலைஞனாக தன் மனக்குறைகளை பொதுவௌியில் தைரியமாக வௌிப்படுத்தி வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் போஸ் வெங்கட் கூறியதாவது, அந்த காலத்தில் மக்களை சந்தோஷப்படுத்த படங்கள் வந்தன. சுந்தர் சி. பி. வாசு எடுத்த படங்கள், மைக்கேல் மதனகாமராஜன் போன்ற படங்கள் நல்ல பொழுதுபோக்கு படங்களாக இருந்தன. மக்கள் சினிமாவை ரசித்து பார்த்து பொழுதை கழித்தனர்.
இப்போது எதுவுமே இல்லாமல் படங்கள் எடுக்கப்படுகின்றன. பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது. பணம் இருக்கிற முதலாளிகள் ஒன்று சேர்ந்து, பெரிய நடிகர்களை ஒன்றுசேர்த்து படம் எடுத்து, மீடியா விளம்பரங்களால் ரசிகர்களை ஒன்றுசேர்த்து 1000 தியேட்டர்களில், 4 காட்சிகளை ஒரே நாளில் திரையிட்டு, மொத்த பணத்தையும் ரசிகர்களிடம் இருந்து பிடுங்கி விடுகின்றனர்.
எல்லா மீனையும் அள்ளிக்கொண்டால், சின்ன படங்களை எடுப்பவர்களுக்கு மீன்கள் கிடைக்காது. சேறும் சகதியும்தான் கிடைக்கும். இன்னும் 5 ஆண்டுகளில் ஓடிடி காரன், சூப்பர் ஸ்டார் யார் என்பதை அவன் தீர்மானிப்பான். சினிமா ஒரு முதலாளியின் கீழ் வரும். அப்போது, அவன் சொல்வதுதான் நடக்கும்.
அப்போது, டெல்லியில் இருந்தோ மும்பையில் இருந்தோ வரும் ஒருவன் சூப்பர் ஸ்டாராக இருப்பான். அவனுக்கு வில்லனாக, அடிமையாக நடிக்க வேண்டிய சூழ்நிலை, தமிழ் நடிகர்களுக்கு வரும். பணத்துக்காக சினிமா கெடுத்துக் கொண்டு இருக்கிற விஜய், அஜீத் போன்றவர்கள் அழுகிற நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
மொழியை காக்க வேண்டும். சினிமாவை காப்பாற்ற வேண்டும். நம் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். இப்படி எல்லா அடையாளத்தையும் இழந்து விட்டால், கடைசியில் உன் அடையாளமே இல்லாமல் போய்விடும் என்ற நிலையில்தான் இந்த பெரிய நடிகர்கள் இருக்கின்றனர் என பேசி இருக்கிறார் நடிகர் போஸ் வெங்கட்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…