லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வருகிற 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி, படாஸ், அன்பெனும் ஆயுதம் உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. படம் ரிலீஸ் ஆக 3 நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை பிரமோஷன் செய்யும் விதமாக லோகேஷ் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
லியோ படத்தின் ஆன்லைன் புக்கிங் ஒருபுறம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் திரையரங்குகளில் வரிசையில் காத்து நின்று ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பலர் வெயில் மழை பார்க்காமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக்கிங் செய்கின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் புக்கிங் களத்தில் பெங்களூரில் லியோ படத்தின் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இயக்குனர் மற்றும் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு படத்தை பார்ப்பதற்காக 2500 ரூபாயை வீணடிக்காதீர்கள். அந்த பணத்தை வைத்து நல்ல சாப்பிடுங்கள். மாதாந்திர தவணையை செலுத்துங்கள். புதிய உடையை வாங்கிக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…