Categories: சினிமா

பி. வாசு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றி பெற்ற 5 தமிழ் திரைப்படங்கள்…

Spread the love

பி வாசு தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 65 படங்களுக்கும் மேல் இயக்கியவர் பி. வாசு. இவரின் முழு பெயர் வாசு பீதாம்பரம் என்பதாகும்.

இவரது தந்தை பீதாம்பரம் எம் ஜி ஆர் மற்றும் என் டி ராமராவ் ஆகியோரின் படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றியவர். அவர் முன்னணி ஒப்பன கலைஞர்களில் ஒருவராக இருந்தது மட்டுமல்லாமல் 30 ஆண்டுகளாக ஒப்பனை சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். பின்னர் தயாரிப்பாளராக மாறி தெலுங்கில் சுமார் 25 படங்கள் தென்னிந்தியாவின் பல படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்தார் பீதாம்பரம்.

பி வாசு இயக்குனர் சிவி ஸ்ரீதரனிடம் உதவியாளராக சேர்ந்தார். 1990 களில் பி வாசு தயாரித்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியார் பி வாசு. அப்படி முன்னணி நடிகர்களை வைத்து பி வாசு இயக்கி வெற்றி பெற்ற ஐந்து தமிழ் திரைப்படங்களை இனி காண்போம்.

1. வால்டர் வெற்றிவேல்

1993 ஆம் ஆண்டு பி வாசு இயக்கி சத்யராஜ் சுகன்யா நடித்த திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இத்திரைப்படத்தில் விஜயகுமார், கவுண்டமணி, நாசர், காந்திமதி, ரஞ்சிதா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி ஹிட்டானது.

2. சின்னதம்பி

1991 ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தில் பிரபு மற்றும் குஷ்பூ முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இத்திரைப்படத்தை பி வாசு இயக்கியுள்ளார். மேலும் மனோரமா, ராதாரவி, உதய பிரகாஷ், கவுண்டமணி போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்திருப்பர். இத்திரைப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மெகா ஹிட் ஆனது.

3.மன்னன்

1992 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, விஜயசாந்தி, மனோரமா, பண்டரிபாய், கவுண்டமணி, விசு ஆகியோர் நடித்த திரைப்படம் மன்னன். இந்த திரைப்படமும் 150 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது.

4. கூலி

1995 ஆம் ஆண்டு பி வாசு எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் சரத்குமார், மீனா, ராதாரவி, ராஜா, கவிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.

5. சேதுபதி ஐபிஎஸ்
பி வாசு இயக்கிய மற்றொரு வெற்றி திரைப்படம் தான் சேதுபதி ஐபிஎஸ். இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது. திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் மீனா நடித்துள்ளனர். திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததோடு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

admin

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

18 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

21 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

47 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago