நள்ளிரவில் சுடுகாட்டில் நீதிபதியின் போட்டோ…. 2 மணிக்கு நடந்த அமானுஷ்ய பூஜை…. அலறி அடித்து ஓடிய கும்பல்…. மாட்டிக்கொண்ட நபர் சொன்ன ஷாக் உண்மை!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பில்லி சூனியம் வைக்க முயன்ற கும்பலை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலாஸ்பூர் மாவட்டத்தின் சிபாட் அருகிலுள்ள தியோரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில், நள்ளிரவு நேரத்தில் சிலர் அமானுஷ்ய சடங்குகளில் ஈடுபடுவதைக் கண்ட கிராமவாசிகள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு சடங்குகளைச் செய்துகொண்டிருந்த நான்கு பேரில் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், ரிஷிகேஷ் குமார் என்பவர் மட்டும் மக்களிடம் பிடிபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் மேலும் இருவரின் புகைப்படங்களை வைத்துத் தாந்த்ரீக பூஜைகள் செய்யப்பட்டது தெரியவந்தது. சுடுகாட்டில் எலுமிச்சை, மீன்கள், குங்குமம், தேங்காய் மற்றும் பலியிடுவதற்கான பொருட்கள் உள்ளிட்ட பல அமானுஷ்ய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைதான நபரை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், இந்த விசித்திரமான பூஜைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

முதல் கட்ட விசாரணையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினருக்கு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சடங்கு நடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமான ஒரு மந்திரவாதியை அணுகி, நீதிபதிக்கு எதிராகப் பில்லி சூனியம் வைத்தால் சாதகமான தீர்ப்பு வரும் என நம்பி இவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். நீதித் துறைத் தலைவரையே அமானுஷ்ய பூஜைகள் மூலம் கட்டுப்படுத்த முயன்ற இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

18 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

32 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

39 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

46 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

56 minutes ago