இன்னும் 177 நாட்கள் தான்… திமுகவுக்கு முகூர்த்த தேதி குறிச்சாச்சு…. பரபரப்பை கிளப்பிவிட்ட நயினார் நாகேந்திரன்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விஜய் பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என்று கூறிக் கொண்டிருக்க அது எப்படி சாத்தியமாகும் என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக தான் உள்ளது. இருந்தாலும் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.  இதற்கெல்லாம் முக்கிய காரணம் அதிமுக மற்றும் விஜயை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டால் திமுக ஆட்சியை எளிதில் வீழ்த்தி விடலாம் என பாஜக கணக்கு போடுகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட முகூர்த்த நாள் குறிக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சூளுரைத்துள்ளார். திமுக ஆட்சியின் முடிவுக்கு இபிஎஸ் முன்னுரை எழுத பாஜக முடிவுரை எழுதும் என்றும் சபதம் ஏற்றார். திமுக ஆட்சிக்கு முடிவு எழுத 177 நாட்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுகவினர் தமிழை விற்று பிழைத்தவர்கள் என்றும் காட்டமாக விமர்சித்தார். மேலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

9 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

9 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

10 மணத்தியாலங்கள் ago