Categories: CINEMA

சரக்கு பார்ட்டிக்கு மட்டும் வீட்ல ஒரு மினி பார் இருக்கு.. 3 லட்சத்தில் வாஸ்து மீன்.. VJ மகேஸ்வரியின் பிரமாண்ட வீடு..!

விஜே மகேஸ்வரி தனது மகனுடன் வாழ்ந்து வரும் வீட்டை சுற்றி காட்டி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய விஜே மகேஸ்வரி சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிரபலமான பெண் தொகுப்பாளினிகளில் மகேஸ்வரியும் ஒருவர்.

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் இசையருவி தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட விஜே மகேஸ்வரி சினிமாவை விட்டு விலகினார். ஆனால் விதி இவரை சினிமாவிலிருந்து விலக விடவில்லை. திருமணமாகி குழந்தை பெற்ற ஒன்றரை வருடத்திலேயே கணவரிடம் விவாகரத்து பெற்றார்.

வேறு வழி இல்லாமல் மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினர். திருமணத்திற்கு பின்பு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான அஷ்டலட்சுமி நிகழ்ச்சி மூலமாக நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது தனது மகன் கேசவ் மற்றும் அம்மாவுடன் வசித்து வருகிறார். வெள்ளித்திரை வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர் கலராக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் கிளாமர் வித்தியாசமான போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு வருகின்றார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஸ்வரி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடினார். பின்னர் முன்கோபம் காரணமாக குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவருக்கு விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டாவது மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மகேஸ்வரி அவபோது தனது மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தான் வசிக்கும் வீடு ஒன்றை சுட்டிக்காட்டி இருக்கின்றார். விஜே மகேஸ்வரி இந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே பார் ஒன்றை வைத்து இருக்கின்றார்.

அதாவது நண்பர்களுடன் ஐபிஎல் மேட்ச் பார்ப்பதற்கும், நெட்பிளிக்ஸ் சீரியஸ் பார்ப்பதற்கும் நண்பர்களுடன் பார்ட்டி செய்வதற்கு அந்த இடத்தை பயன்படுத்துவோம் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். வீட்டுக்குள் மினி பார் செட்டப்பையை வைத்திருக்கின்றார். அதைத் தொடர்ந்து மூன்று லட்சம் மதிப்புள்ள வாஸ்து மீன் ஒன்றையும் வளர்த்து வருகிறார். வீடு பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

7 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

8 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

9 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

9 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

10 hours ago