விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு விதமான தாக்கம் நிகழ்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் பிக் பாஸ் வீட்டில் மட்டும் பரபரப்பு இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சேர்த்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் எப்போதுமே பொதுமக்கள் ஓட்டு தான் வெற்றியாளர்களை தீர்மானித்து வருகின்றது. அதேசமயம் போட்டியாளர்களை வெளியேற்றும் வருகிறது. ஆனால் இந்த முறை முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட சாச்சனா வெளியேற்றத்தை பிக் பாஸ் தீர்மானித்து விட்டது மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது. பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த எலிமினேஷன் எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டதோ அதே அளவுக்கு பரபரப்பை ரவீந்தரின் எலிமினேஷனும் முன்வைக்கப்பட்டது. வழக்கமாக முதல் வாரமே யாருமே எலிமினேட் செய்யப்பட்டதாக பிக் பாஸ் வரலாற்றில் கிடையாது. ஆனால் இந்த முறை ரவிந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடைய ஆட்டம் பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி சலசலப்பை உண்டாக்கியது ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றாலும் அவரின் உடல் நிலையும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அன்ஷிதா முத்துக்குமாரிடம் சண்டை போடுகிறார். அதில் நீ நல்லா நடிக்கிற உண்மையாவே இல்ல உன்ன பத்தி நல்லா எனக்கு தெரிஞ்சிருச்சு என்று முத்துக்குமாரிடம் கூறுகிறார். உடனே அவர் நான் இங்கே விளையாட தான் வந்து இருக்கேன். அது உங்களுக்கு மோசமாக தெரிய வாய்ப்புள்ளது. ஏன்னா உங்களை எதுக்கு தான் நான் விளையாடுறேன். அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று முத்துக்குமார் கூற உடனே டென்ஷனான அன்ஷிதா கத்தி சண்டை போடுகிறார். உன் கூட பேச எனக்கு விருப்பம் இல்ல என் கூட பேசாத என்று கத்திக் கொண்டே செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…