#image_title
விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது. அதனை பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் உறுதிசெய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை முடிவடையவுள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா தான் வெற்றிபெற்றுள்ளார் என்று விஜய் டிவி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
அதிகம் மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ள நிலையில் மக்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் பலரும் வெளியேற்றப்பட்டார்கள் இந்நிகழ்ச்சி 100 நாட்களுக்கு மேல் பயணித்து இறுதி வாரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் நடுவில் மிட் எவிக்சனாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.தற்போது டாப் 5 போட்டியாளர்களாக மணி, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, மாயா ஆகியோர் உள்ளனர். கடைசி வாரம் என்பதால் பிக் பாஸ் வீடே திருவிழா கோலம் கொண்டுள்ளது.
இந்த சீசனில் யார் வின்னர்? இரண்டாவது இடத்தை பிடிக்கபோவது யார்? என்ற கணிப்பு உருவாகி இருந்தது. சமூக வலைதளங்களில் வைத்த கருத்து கணிப்பின்படி அர்ச்சனா அதிக அளவு வாக்குகளை பெற்றிருந்தார். மணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். மற்ற மூன்று இடங்களை தினேஷ்,விஷ்ணு, மாயா பிடித்துள்ளனர்.
இப்போட்டியில் வின்னர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியான அர்ச்சனா தான் வெற்றியாளர் என்ற தகவல் வைரலாக பரவிவருகிறது. பிக் பாஸ் போட்டியாளரான பிரதீப் அதனை உறுதி செய்துள்ளார். மேலும் விஜய் டிவி வட்டாரங்களில் இருந்ததும் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…