விஜய் டிவியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. கமல்ஹாசன் கடந்த ஏழு சீசர்களை தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு போலவே விஜய் சேதுபதிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படியான நிலையில் இதுவரை பிக்பாஸ் டைட்டில் வென்றவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் யாருக்குமே கிடையாது. அந்த சமயத்தில் நன்றாக விளையாடிய கோப்பையை வென்றவர் தான் ஆரவ். மருத்துவ முத்தம் மற்றும் ஓவியா தற்கொலை முயற்சி என இந்த நிகழ்ச்சி ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற காரணமாக இருந்தவரும் இவர்தான். முதல் சீசனில் வெற்றி பெற்ற இவருக்கு பெரிதாக படங்கள் எதுவும் கிடைக்காததால் சுய தொழில் ஒன்றில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா:
முதல் சீசனைப் போல் இல்லாமல் கொஞ்சம் மொக்கையாக இந்த சீசன் சென்றது என்று சொல்லலாம். 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த போட்டியில் மும்தாஜ், டானியல், ஜனனி மற்றும் யாஷிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த சீசன் மூலம் முதல் முறையாக பெண் ஒருவர் வின்னர் அப் பட்டத்தை வென்றார். துணை நடிகையாக இருந்த போது பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற இவர் தற்போதும் துணை நடிகையாகவே இருந்து வருகிறார். தற்போது இவரை சினிமாவில் பார்ப்பது என்பது அரிதாகி விட்டது.
சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ்:
எத்தனை சீஷர்கள் வந்தாலும் இந்த சீசனை யாராலும் மறக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு பொழுது போக்காக இருந்தது. இந்த சீசனில் சாண்டி மாஸ்டர், கவின் மற்றும் முகேன் ராவ் உள்ளிட்டோர் செய்த சேட்டைகள் இன்றளவும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. டைட்டில் வென்ற முகேன் தனியாக பாடல்களை எழுதி பாடி டிஜிட்டல் தளங்களில் வைரலாகி வருகின்றார்.
சீசன் 4 வின்னர் ஆரி அர்ஜூன்:
கொரோனா சமயத்தில் இந்த சீசன் தொடங்கியதால் இதனை வீக் எண்டு எபிசோடில் நேரில் சென்று சிலரால் பார்க்க முடியவில்லை. 18 பேருடன் தொடங்கிய இந்த போட்டியில் ஆரம்பம் முதலில் அளப்பறையுடன் விளையாடி இறுதியில் டைட்டிலை ஆரி அர்ஜுன் வென்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பல படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு பெரிதாக படங்கள் எதுவும் இல்லாததால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
சீசன் 5 வின்னர் ராஜு மோகன்:
மற்ற சீசன்களுடன் ஒப்பிடும்போது இந்த சீசனுக்கு குறைவான டிஆர்பி ரேட்டிங் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. வலுவான போட்டியாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இதில் நடத்தப்பட்ட டாஸ்க்குகள் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது. இறுதியாக டைட்டில் வென்ற ராஜு மோகன் ஒரு தொகுப்பாளராக இருக்கும்போது போட்டிக்குள் வந்த நிலையில் தற்போது பல விருது விழாக்களை தொகுத்து வழங்கி வருகின்றார்.
சீசன் 6 வின்னர் அசீம்:
இந்த சீசன் மக்கள் மத்தியில் ஒரு வித புரட்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் அசீம் மற்றும் விக்ரமன் சண்டையை வெறிகொண்டு பார்த்தனர். ஆனால் இதில் திருநங்கையாக கலந்து கொண்ட ஷிவின் தான் ரியல் ஹீரோ என்று பலரும் பாராட்டினர். விக்ரமன் ஜெயபால் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக அசீம் வெற்றி பெற்றார். தற்போது இவர் தன்னை பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இதைத் தாண்டி சினிமா அல்லது சீரியல் எதிலும் முகம் காட்டாமல் இருக்கிறார்.
சீசன் 7 வின்னர் அர்ச்சனா;
பிக்பாஸ் வோட்டைக்குள் ஒருவர் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து இறுதியில் டைட்டிலை வென்றது இதுவே முதல் முறையாகும். பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம் மற்றும் வீட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பேச்சு உள்ளிட்டவை இவருக்கு சாதகமாக அமைந்த நிலையில் இறுதியாக டைட்டில் பட்டம் வென்றார். முன்னாள் தொகுப்பாளராக இருந்த இவரை தேடி தற்போது பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன்:
மற்ற சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார். இதில் ஒன்றுமே செய்யாத போட்டியாளர்கள் இறுதிவரை சென்ற நிலையில் பல தகுதியான போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகினர். இருந்தாலும் தன்னுடைய திறமையால் அனைத்து டாஸ்க்களையும் சிறப்பாக செய்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை படித்த போட்டியாளர் முத்துக்குமரன் தான் இந்த சீசனின் டைட்டிலை வென்றார். தொடர்ந்து சௌந்தர்யா இரண்டாம் இடம் பிடித்தார்.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த நிலையில், தற்போது மீதமுள்ள…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தாயான பெண்ணை…
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது அனாதைச் சிறுமியை, அவரது பெற்றோர் மறைவுக்குப் பின் வளர்த்து வந்த சொந்த அத்தையும்…
முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவருமான அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,…
தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவீதம் குறைந்துள்ளதை தவெக அரசு தனது சாதனையாக முன்னிறுத்தி வரும் நிலையில், அதற்கு…
ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து பாஜகவினர் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின்…