பிக்பாஸ் ஷோவில் உண்மையில் இதுதான் நடக்கும்.. என் மேலேயே கேஸ் போட்டுட்டாங்க.. சுரேஷ் சக்கரவர்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் சொக்கு என்ற வேடத்தில் இவர் நடித்து அசத்து இருப்பார். அதனைப் போலவே பாட்டிகள் ஜாக்கிரதை என்ற பெயரில் வெளியான குறுந்தொடரில் பாட்டி வேடத்தில் நடித்தவர். அவ்வை சண்முகி படத்தில் நடிப்பதற்கு இந்த கதாபாத்திரமே கமலுக்கு இன்ஸ்பிரேஷன். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார். பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியையும் சில காலம் நடத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பனானா ட்ரீ என்ற பெயரில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு வரும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கு உதவி வருகிறார். அன்புடன் ரம்யா கிருஷ்ணன் என்ற பெயரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் இணைந்து சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். சமையல் வித்தகரான இவர் இவரின் பெயரிலையே ஒரு youtube சேனல் வைத்து அதில் விதவிதமான சமையல்களை எப்படி செய்வது என வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில், பதி சபாபதி சீரியலில் நான் பெண் வேடத்தை ஏற்று நடித்திருந்தேன்.

அடுத்து எனக்குள் ஒருத்தி என்ற சீரியலில் ஒரு பெரிய டைரக்டர் புரொடியூஸ் பண்ணதால் அதில் நடித்தேன். ஆறு எபிசோடு பண்ணதுக்கு அப்பறம் இதை ஒரு ஷார்ட் பிலிம் ஆக எடுக்கலாம் என்று அவர் சொன்னதால் அப்படியே நிப்பாட்டிட்டாங்க. சன் டிவியில் அப்போ கிடைக்காததால் ஜெயா டிவியில் இதை எடுக்கலாம் என்று யோசித்து முடிவு பண்ணாங்க. ஒரு மட்டமான ஃபேமிலியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை கொண்ட எனக்குள் ஒருத்தி என்ற அந்த கதையில் ப்ரொடியூசருக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் நடிகர் நடிகைகள் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இதனால் சுமார் அப்பா மகன் மற்றும் அம்மா என ஆறு கேரக்டர்களை நானே ஏற்று இருந்தேன்.

அடுத்ததாக சமீபத்தில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது அனைவருமே போக வேண்டாம் என்று தான் சொன்னாங்க. இது ஒரு சைக்கலாஜிக்கல் கேம் ஷோ. நான் அந்த நிகழ்ச்சிக்கு போனதுக்கு அப்புறம் என்னால நிறைய பேர் மென்டல் ஆனாங்களே தவிர நான் யாராலயும் மெண்டல் ஆகல. அந்த வீட்ல நடக்கக்கூடிய சண்டைகள் அனைத்தும் உண்மைதான். நான் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான போன் கூட நம்ம பக்கத்தில் இருக்காது. வாரத்துல கடைசி நாள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் நம்ம கிட்ட பேசுவாரு. மற்றபடி அந்த வீட்ல இருக்கவங்க குரலையும் பிக் பாஸ் குரலையும் மட்டும்தான் கேட்டுகிட்டு இருக்கணும். இன்னைக்கு ஒருத்தர் கிட்ட சண்டை போட்டுக்கிட்டா அடுத்த நாள் அவங்க கூட ஸ்டேஜ்ல ஒன்னும் ஆட சொல்லுவார்கள்.

இது ஸ்கிரிப்ட் எல்லாம் கிடையாது. ஒரு சைக்கலாஜிக்கல் நிகழ்ச்சி தான் என்று கூறிய சுரேஷ் சக்கரவர்த்தி தான் நடத்திய ஹோட்டல் உணவகம் மீது ஒருவர் கேஸ் போட்ட சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். அதாவது என்னுடைய ஹோட்டலில் மைசூர் தோசை ரொம்பவும் பிரபலமானது. அந்த ஊரில் வேலையை முடிச்சு ரிட்டயர் ஆனா வீட்ல சும்மா தான் இருப்பாங்க. அப்படி ஒரு நபர் தினமும் அவங்க மனைவி கிட்ட சொல்லி மைசூர் தோசை வாங்கிட்டு வர சொல்லுவாரு. இதனால கடுப்பான அவங்க மனைவி உன்னுடைய தோசைக்கு அடிமையாக மாதிரி நீ ஏதோ ஒரு பொருளை இதுல சேர்த்து இருக்க என்று சொல்லி அந்த ஊர்ல இருக்க உணவு பாதுகாப்பு துறையில் கம்பளைண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் அந்த தோசையில நான் என்ன சேர்த்து இருக்கேன்னு வந்து டெஸ்ட் எல்லாம் பண்ணி ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டு போனாங்க. இது மாதிரி சம்பவம் எல்லாம் நடந்துச்சு என்று சுரேஷ் சக்கரவர்த்தி பகிர்ந்துள்ளார்.

Nanthini

Recent Posts

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

3 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

7 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

11 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

12 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

14 minutes ago

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

16 minutes ago