விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொள்பவர்கள் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர்.
‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் 7 –இல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சீசனில் பிரபலங்கள் பலரை களத்தில் இறக்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதுமைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா,நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா,
நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால் வி.ஜே. பார்வதி ஆகிய 18 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பாவனா மற்றும் பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோரும் இந்த உத்தேச பட்டியலில் இணைந்துள்ளார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலில் இருப்பவர்கள்தான் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…