விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர்.
இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியை நெருங்கிய நிலையிலும் போட்டியாளர்கள் சீரியஸாக விளையாடாமல் இருந்து வருவதை பிக் பாஸ் டீமுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதனால் பிக் பாஸ் தொடர்ந்து போட்டியாளர்களை எச்சரித்து வருகின்றார். ஆனால் போட்டியாளர்கள் அதை மதிக்காமல் விட்டுக் கொடுத்து டாஸ்க் விளையாடி வருகிறார்கள். நேற்று நடந்த கேப்டன்சி டாஸ்க் முத்து விட்டுக் கொடுத்து விளையாடியதால் பிக் பாஸ் டென்ஷன் ஆகி போட்டியாளர்களை கடுமையாக திட்டினார். கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாமல் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கூட ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களைப் போல இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இந்த வாரம் சிங்கிள் எலிமினேஷன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெளியே போக போவது ரயான் அல்லது ரஞ்சித் ஆக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…