Categories: CINEMA

குயில்களும் உன் குரலில் தோற்றுவிடுமே.. குடும்பத்துடன் பாடி அசத்திய பவதாரணி.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ..!!

பிரபல பாடகியான பவதாரணி இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். கார்த்திக் ராசா, யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு பிரேம்ஜி ஆகியோர் பவதாரணியின் சகோதரர்கள். கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பவதாரணி பாடினார்.

இந்த பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், அழகி, தாமிரபரணி, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இடம்பெற்ற பாடல்களை பவதாரணி பாடியுள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் ரிலீஸ் ஆன மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

பவதாரணியின் குரலால் வரும் பாடல்களை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி மாதம் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் ரிலீஸ் ஆனது.

மறைந்த பாடகி பவதாராணி பாடுவது போல AI தொழில்நுட்பம் பயன்படுத்தி யுவன் சங்கர் ராஜா பாடலை இசை அமைத்துள்ளனர். தளபதி விஜய்யும் அந்த பாடலில் பாடி இருக்கிறார். ரிலீஸ் ஆன உடனே பாடல் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பவதாரணி தனது சகோதரர்களுடன் இணைந்து பாடிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இனிமையான குரலுக்கு சொந்தக்காரி பவதாரணி மறைவை எண்ணி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

குடும்பத்தினருடன் சென்று பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…

2 மணி நேரங்கள் ago

பொண்ணு மாப்புள ஜோரு, ஒண்ணா சேருது பாரு.. கலைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் திருமணம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…

3 மணி நேரங்கள் ago

மஞ்சள் நிற உடையில், கவர்ச்சியில் தாராளம் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…

5 மணி நேரங்கள் ago

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…

6 மணி நேரங்கள் ago

விஜய் கண்டிப்பா அதை விடனும்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் சுசித்ரா..!!

பிரபல பாடகியான சுசித்ரா எப்போதும் நடிகர் நடிகைகள் பற்றி தனது கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார். கடந்த சில நாட்களுக்கு…

6 மணி நேரங்கள் ago

விட்டதை பிடித்து வசூலில் கம்பேக் கொடுத்த கல்கி 2898 AD.. 3-வது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி திரைப்படம் 3-வது நாளிலும் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.…

7 மணி நேரங்கள் ago