#image_title
நடிகர் பாவா லட்சுமணன் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அதிலும் மாயி படத்தில் வாம்மா மின்னல் காமெடியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் பாவா லட்சுமணன். சமீபத்தில் பாவா லட்சுமணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, சந்தானம் ஆபீஸ்ல ஆறு பேர் இருக்காங்க. அப்போ அவங்கள டிராக் எழுத வச்சிருந்தாரு.
இப்போ சந்தானம் ஹீரோ ஆகிவிட்டார். இப்பவும் அவங்களுக்கு மாச சம்பளம் கொடுக்கிறார். முதல் நபருக்கு 5 லட்சம் 2-வது நபருக்கு 3 லட்சம் கடைசியாக உள்ள நபருக்கு 50 ஆயிரம் என இப்ப வரைக்கும் சம்பளம் கொடுத்துட்டு தான் இருக்காரு. கொரோனா சமயத்திலும் சந்தானம் சம்பளம் கொடுத்துட்டு தான் இருந்தாரு. சந்தானம் மாதிரி எண்ணங்கள் உள்ள மனுஷன் யாருமே கிடையாது. நான் ஹாஸ்பிடல்ல இருந்தப்போ பணம் கட்டி எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாரு. இப்ப கூட ஹெல்ப் பண்ணிட்டு தான் இருக்காரு.
என் அக்கா பையன் கல்யாணத்துக்கு என்கிட்ட காசு இல்ல. போன் பண்ணி பத்தாயிரம் ரூபா கேட்டேன். ஆனா அவரு 20 ஆயிரம் ரூபா போட்டு விட்டாரு என கூறியுள்ளார். பிரபல காமெடி நடிகரான சந்தானம் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். கடந்த 2004-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் ரிலீசான மன்மதன் திரைப்படத்தில் நடித்து சந்தானம் வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு பலர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் சந்தானம் நடித்துள்ளார். சச்சின், சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும், சில்லுனு ஒரு காதல், வல்லவன், கிரீடம், பொல்லாதவன், சந்தோஷ் சுப்பிரமணியம், சிவா மனசுல சக்தி, மாஞ்சா வேலு, தில்லாலங்கடி, எந்திரன், சிறுத்தை, தெய்வத்திருமகள், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போவது ஹீரோவாக நடித்து வருகிறார்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…