#image_title
தமிழ் சினிமாவில் 1980 களில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக மாறியவர் ராம்கி. சின்னப் பூவே மெல்லப் பேசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹேண்ட்சம் நடிகரான ராம்கி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
அதன் பின்னர் வரிசையாக படங்களில் நடித்த அவருக்கு மருதுபாண்டி, செந்தூரப் பூவே, பறவைகள் பலவிதம், இணைந்த கைகள், வனஜா கிரிஜா உள்ளிட்ட படங்கள் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை.
அதனால் அவருக்கு சினிமாவில் இருந்து ஒரு இடைவேளை விழுந்தது. பின்னர் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் சில படங்களில் தோன்றினார். ஆனால் எதுவுமே அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமையவில்லை.
அந்த சூழ்நிலையில்தான் கடந்த தீபாவளிக்கு வெளியான ல்க்கி பாஸ்கர் திரைப்படம் அவரை மீண்டும் லைம்லைட்டில் கொண்டுவந்துள்ளது. அந்த படத்தில் அவர் நடித்த ஆண்டனி கதாபாத்திரம் மிகச்சிறிய ஒன்றாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் போல நம்பிக்கைக்குரிய ஒரு நண்பர் இருந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என மீம்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் லக்கி பாஸ்கர் வெற்றி களிப்பில் இருக்கும் ராம்கி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய திரை வாழ்க்கையின் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘என்னிடம் ஒருமுறை இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது ‘யோவ் நான் மிஸ் பண்ணது ரெண்டே ஹீரோக்கள்தான். ஒன்னு சிவகுமார், இன்னொன்னு நீதான் என சொன்னார்.
சிவகுமார் அண்ணன் அதன் பிறகு அவர் படத்தில் நடித்துவிட்டார். நான் இன்னும் நடிக்கவில்லை. சொல்ல முடியாது திடீர்னு கூப்பிட்டாலும் கூப்பிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…