Categories: சினிமா

நேபாளி படத்தில் இமையை தூக்கி வைத்து நடிக்க அவ்ளோ கஷ்டப்பட்ட பரத்… அவரே சொன்ன விஷயம்..!

Spread the love

தமிழில் கமர்சியல் திரைப்படங்களை தவிர்த்து சில சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து பலதரப்பட்ட வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் தான் பரத். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட பரத் சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். பிறகு 2003 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தான் பரத் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் அறிமுகத்திலேயே நமக்கு மிகவும் பரிச்சயமான பரத், விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.

#image_title

இவ்வாறு ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வந்த பாரத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த வெயில், சேவல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ஒரு நல்ல கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.

#

ஆனால் நேபாளி திரைப்படத்தில் மிகவும் ஆபாசமாக இவர் நடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் ஒரு ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்று முடிவெடுத்து பரத் பழனி மற்றும் திருத்தணி ஆகிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைத்து பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 20 ஆண்டுகளில் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பரத் ஒரு வெற்றி படத்திற்காக தற்போது வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் இயக்குனர் வி.துரையின் இயக்கத்தில் 2008ல் வெளியான படம் நேபாளி. இதில் பரத் 3 வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார். மீரா ஜாஸ்மின் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.  இந்த படத்தில் பரத் அசல் நேபாளி போல் இமையை தூக்கி வைத்து நடித்து இருப்பார்.  இந்நிலையில் இப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பரத், இந்த படத்திற்கு கண் இமைகளை மேலே தூக்கி வைத்து மேக்கப் போடுவதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆகும். காலையில் 4 மணிக்கு மேக்கப் போட ஆரம்பித்தால் 8 மணி ஆகிவிடும். ஒரிஜினல் கண் இமையை மேக்கப் போட்டு மறைத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் கண்ணை மேல் இழுத்து வைத்து அதன்பின்னர் போலியான புருவத்தை வரைவார்கள். கண்ணை அப்படி வைத்திருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். ரொம்ப நேரம் என்னால் அப்படி கண்களை வைக்க முடியாது என்று பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

3 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago