Categories: சினிமா

எதிர்நீச்சல் சீரியல் நடிகையை தட்டி தூக்கிய விஜய் டிவி.. விரைவில் ஒளிபரப்பாகும் புது சீரியல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 1200 எபிசோடுக்கு மேல் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்டு அவர் சந்திக்கும் போராட்டங்களை அற்புதமாக எடுத்துரைக்கும் வகையில் இந்த சீரியலின் கதை அமைந்துள்ளது. பல கட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தான் செய்த தவறுகளை புரிந்து கொண்ட கோபி திருந்தி வாழ்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார். தன் அம்மா ஈஸ்வரியின் பேச்சை கேட்டு இரண்டாவது மனைவி ராதிகாவை விட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து பாக்யா வீட்டுக்கு வருகிறார்.

இதனால் ராதிகா மற்றும் பாக்யாவின் நிலைமை என்னவாகும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது. அதற்கு பதிலாக விஜய் டிவியில் புத்தம் புது சீரியலை கொண்டு வரப் போகின்றன. ராஜ்குமார் இயக்கத்தில் அய்யனார் துணை என்ற புதிய சீரியல் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கும் நடிகை சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மதுமிதா என்ற ஜனனிதான். இவர் சமீபத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

அதற்கு பதிலாக கூடிய விரைவில் புது சீரியல் உடன் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் கூறினார். அதன்படி தற்போது விஜய் டிவி சீரியலுக்கு அவர் தாவியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் முன்னா என்ற ஆக்டர் கமிட்டாகியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வரும் அய்யனார் துணை என்ற சீரியல் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவியில் புத்தம் புது சீரியலை கொண்டு வந்து டிஆர்பி ரேட்டிங்கில் மாஸ் காட்டப் போகிறது. மேலும் இந்த சீரியலில் அரவிந்த், அருண் மற்றும் பிரவீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனால் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

BIG BREAKING: தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட CM விஜய் உத்தரவு… காலையிலேயே அதிரடி…!

தமிழக முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை…

3 minutes ago

“நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!” – ஈரானின் ரகசிய இடங்களை குறிவைக்கும் ஸ்பேஸ் ஃபோர்ஸ்; டிரம்பின் அதிரடி அறிவிப்பால் பதற்றம்…!!

சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில், ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.…

10 minutes ago

தர்பூசணி பழம் உயிருக்கே எமனான கொடுமை..! சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவன் பலி; 3 குழந்தைகள் கவலைக்கிடம் – சத்தீஸ்கரில் அதிர்ச்சி..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…

18 minutes ago

“தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!… 3.5 லட்சம் கோடி பிஎஃப் நிதியில் கை வைக்க முடியாது… EPFO-வின் புதிய மாஸ்டர் பிளான்”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…

19 minutes ago

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்… “வங்கி FD-யா அல்லது SCSS திட்டமா?… 8.2% வட்டியுடன் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக இரட்டிப்பாக்க சிறந்த வழி இதோ”…!!!

ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…

29 minutes ago