ஈரான் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்… சபஹார் துறைமுகத்தை தகர்த்தஅமெரிக்கா… ஆயிரம் கோடி முதலீடு… அத்தனையும் வீணா?… மோதலில் சிக்கிய இந்தியாவின் கனவுத் திட்டம்…!

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய மூலோபாயப் பகுதியான ‘சபஹார் துறைமுகம்’ மீது அமெரிக்கா அண்மையில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் மற்ற பகுதிகளைக் காட்டிலும், சபஹார் துறைமுகத்தின் மீதான இந்தத் தாக்குதல் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார மற்றும் வர்த்தகத் திட்டங்களுக்கு ஒரு முக்கியப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் நேரடி வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இந்தத் துறைமுக மேம்பாட்டில் இந்தியா பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளின் காரணமாக, சபஹார் துறைமுகத்தில் இருந்த தனது 120 மில்லியன் டாலர் முதலீட்டைப் பாதுகாக்கும் நோக்கில், இந்தியா தனது பங்குகளை தற்காலிகமாக உள்ளூர் ஈரான் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தது. நிலைமை சீரானதும் மீண்டும் இத்திட்டத்தில் முழுமையாக நுழையலாம் என்ற இந்தியாவின் நீண்டகால உத்தியை இந்தத் தாக்குதல் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தியா தற்போது இத்துறைமுகத்தை நேரடியாக நிர்வகிக்கவில்லை என்பதால் உடனடிப் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அங்கு ஏற்பட்டுள்ள ராணுவ மோதல்களும் அரசியல் குழப்பங்களும் சர்வதேச முதலீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்யும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.

பாகிஸ்தானில் சீனா உருவாக்கியுள்ள ‘குவாதர் துறைமுகத்திற்கு’ ஒரு மாற்றாகவும், இந்தியா-ஈரான்-ரஷ்யாவை இணைக்கும் சர்வதேச போக்குவரத்து வழித்தடத்தின் மையப்புள்ளியாகவும் இந்த சபஹார் துறைமுகம் திகழ்கிறது. எனவே, வெறும் முதலீட்டு ரீதியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் நீண்டகால வர்த்தகப் பாதுகாப்புப் பாதையாகவும் இது பார்க்கப்படுகிறது. தற்போதைய அமெரிக்காவின் ராணுவத் தாக்குதலானது, மத்திய ஆசியச் சந்தைகளை அடைய நினைக்கும் இந்தியாவின் நீண்டகாலக் கனவிற்கும், சீனாவுக்கு எதிரான அதன் பாதுகாப்பு அரணுக்கும் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Visaka

Recent Posts

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

3 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

10 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

22 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

29 minutes ago