வங்கியாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் ஜனவரி 27-ம் தேதி (2026) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வங்கியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே கையெழுத்தான ஊதிய திருத்த ஒப்பந்தத்தில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், மத்திய அரசு இதற்கு இதுவரை இறுதி ஒப்புதல் அளிக்காததால், அதிருப்தியடைந்த வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஜன.24 (4-வது சனி), ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் ஏற்கெனவே தொடர் விடுமுறை வருகிறது. 27-ம் தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் வங்கிகள் 4 நாள்கள் இயங்காது. ரிசர்வ் வங்கி (RBI), எல்.ஐ.சி (LIC) போன்ற இதர நிதி நிறுவனங்களில் ஏற்கனவே ஐந்து நாள் வேலை நடைமுறை அமலில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஊழியர்கள், வங்கிகளிலும் இதனை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். வேலை நேரத்தை தினமும் 40 நிமிடங்கள் அதிகரிப்பதன் மூலம் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாது என்றும் தொழிற்சங்கங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…