இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே வங்கி கணக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிறிய வரவு செலவுக்கு கூட வங்கி கணக்கு என்பது அவசியமானதாக உள்ளது. அதேசமயம் தற்போது பலரும் எதிர்காலத்தை எண்ணி சேமித்து வருவதால் வங்கி கணக்கை பயன்படுத்துகின்றனர்.
இப்படியான நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வருகின்ற நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். அந்த நான்கு பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம். டெபாசிட், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…