“என் தொகுதிக்குள்ள கால் வைக்கவே கூடாது” ஸ்கெட்ச் போட்டு அண்ணாமலையை தூக்கிய எடப்பாடி… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே நிலவி வந்த மோதல் போக்கு, தற்போதைய சட்டமன்றத் தேர்தல் கூட்டணியிலும் ஒரு நிழல் யுத்தமாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டதால் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து, வரும் தேர்தலில் கூட்டணி அமைய வேண்டுமானால் அண்ணாமலையைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி நிபந்தனை விதித்தார். அதனை ஏற்று டெல்லி தலைமை அண்ணாமலையை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை நியமித்த பிறகே, அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்தது. தற்போது அண்ணாமலைக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாத நிலையில், இருவருக்கும் இடையே மறைமுக மோதல் நீடித்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சீட் வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோவையில் போட்டியிட அண்ணாமலை ஆர்வமாக இருந்தும், எடப்பாடி பழனிசாமியின் காய்நகர்த்தல்களால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என அண்ணாமலை ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அண்ணாமலை, தற்போது பிரசாரத்தை மட்டுமே கவனித்து வருகிறார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடிக்கு பிரசாரம் செய்ய வர வேண்டாம் என அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

“அண்ணாமலை வந்து பிரசாரம் செய்ததால்தான் நான் வெற்றி பெற்றேன்” என அவர் சொந்தம் கொண்டாடுவதைத் தவிர்க்கவே எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், மற்ற 15க்கும் மேற்பட்ட அதிமுக தொகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை முன்பு தற்குறி என்றும், கிணற்றுத்தவளை என்றும் விமர்சித்ததை அதிமுக தொண்டர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால், எடப்பாடி தொகுதியில் அவருக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இருப்பினும், தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி தர்மத்திற்காக இருவரும் ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் இணைந்து மேடை ஏற வாய்ப்புள்ளதாக அதிமுக தரப்பு தெரிவிக்கிறது.

Soundarya

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

4 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

4 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

4 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

5 மணத்தியாலங்கள் ago