#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.
இந்நிலையில் தற்போது பாலா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பாலாவின் நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.
#image_title
இதில் பாலாவுக்கு நெருக்கமான நபரும், தந்தை ஸ்தானத்தில் பாலா பார்க்கும் நடிகருமான சிவகுமார் கலந்துகொண்டு பாலாவிடம் கேள்வி கேட்டு உரையாடினார். அப்போது சிவகுமார் ரஜினி கமல் வைத்து படம் பண்ணுவியா எனக் கேட்டபோது அதற்கு பாலா சொன்ன பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த உரையாடல்
சிவகுமார்: ரஜினி கமலுக்குப் படம் பண்ணுவீர்களா?
பாலா : பண்ணமாட்டேன். அவர்கள் பாதை வேறு.. என் பாதை வேறு
சிவகுமார் : ஒருவேளை அவர்கள் உன் படத்தில் அகோரியாக நடிக்கிறேன் என்று சொன்னார்கள் என்றால்..?
பாலா : அவர்கள் சொல்ல மாட்டார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…