விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் கதையை மையமாக கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வரும் நிலையில் தற்போது புதிய கதைகளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ராமமூர்த்தியின் இறப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்பத்தினர் அனைவரும் ராமமூர்த்தியின் இறப்பால் பெரும் சோகத்தில் உள்ளனர்.
நேற்று ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் அனைத்தையும் பாக்கிய செய்து முடித்தார். அப்பா என்று கதறி அழுதபடி அனைத்து இறுதி சடங்குகளையும் பாக்கியா செய்த நிலையில் தான் செய்த தவறுகளை எண்ணி மனமுடைந்து போய் தன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கோபி கதறி அழுகிறார். இந்த நிலையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ராமமூர்த்தி இறப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சோகத்தில் உள்ள நிலையில் ஒரே இடத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
அப்போது பாக்யா படிக்கட்டில் இருந்து இறங்கி வர எப்போதும் அமர்ந்து கொண்டிருக்கும் நாற்காலியில் ராமமூர்த்தி அமர்ந்து கொண்டு பாக்கியா என்று கூப்பிடுவது போல தோன்றுகிறது. உடனே அங்கு வந்து பாக்யா கதறி அழுகிறார். பிறகு ஈஸ்வரி பொட்டு இல்லாமல் நல்லாவே இல்லை என்று இனியா கூறிக் கொண்டிருக்க உடனே அங்கு வந்த பாக்கியா ஈஸ்வரிக்கு பொட்டு வைத்து விடுகிறார். அதனை ஈஸ்வரி மறுக்க, நீங்கள் எப்போதும் போல இருந்தால்தான் மாமாவிற்கு பிடிக்கும் என்று கூறி பாக்யா பொட்டு வைத்து விடுகிறார். இனி பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…