முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் விளங்குகிறது. இக்கோவிலில் தெய்வானை என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்த யானை ஆசிர்வாதம் அளிக்கிறது. தெய்வானை யானையை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி கோவிலில் இருந்த போது பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசிபாலன் ஆகியோரை தெய்வானை யானை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் பாகன் உதயகுமாரின் மகள்கள் அக்சரா மற்றும் அகல்யா இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்று வந்தனர். தெய்வானை யானை பராமரிக்கப்படும் இடத்துக்கு சென்று யானைக்கு தர்பூசணி பலாப்பழம் கரும்பு செவ்வாழை ஆப்பிள் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வழங்கினர். அப்போது தெய்வானை யானை உற்சாகமாக அவர்கள் கொடுத்த பழங்களை வாங்கி உண்டது. பிறகு இருவரையும் தனது தும்பிக்கையால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தியது. அதன் பிறகு பெண்கள் இருவரும் யானையின் காலில் விழுந்தனர். அவர்களை யானை தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்து அவர்களை வழியனுப்பியது. இந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…