#image_title
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து பிரபலமானவர் பேபி இந்திரா. இவர் பிரபல நடிகரான மாஸ்டர் ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரசாந்த் ரக்ஷித் பாலாஜி என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பேபி இந்திரா மூன்று வயதிலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர்களுக்கு மகளாக நடித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா அரசுகளின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. நான் ஏன் பிறந்தேன் படத்தில் இடம்பெற்ற தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
சமீபத்தில் பேபி இந்திரா அளித்த பேட்டியில் கூறியதாவது, நானும் ஸ்ரீதர் சாரும் ஒரு சூட்டிங் நடந்து போது தான் முதன் முதலில் பார்த்துக்கொண்டோம். நிறைய பங்க்ஷன் நடக்கும் போதும் பார்த்திருக்கோம். அவரும் சரி நானும் சரி ஒருத்தர் அப்படிங்குற மரியாதையோட நலம் விசாரிச்சுப்போம். அவருக்கு நான் பேபி இந்திரா என்று தெரியும். எனக்கு அவர் ஸ்ரீதர் மாஸ்டர்னு தெரியும். கடவுள் எங்களுக்குள் எப்படியோ ஒரு முடிச்சு போட்டு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சு குழந்தை நட்சத்திரமாக இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே தம்பதி நாங்களா தான் இருப்போம் என நினைக்கிறேன்.
நடிக்க சொன்னா ஒரு பேப்பர் முழுக்க டயலாக் கொடுத்தாலும் நான் படிச்சிருவேன். எந்த மொழியிலும் நடிச்சிடுவேன். ஆனா ஸ்டூடியோக்கு வெளியே எனக்கு வெளி உலகம் அவ்வளவா தெரியாது. கலையைத் தாண்டி ஒரு உலகம் இருக்கு. அது எப்படி வாழனும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தவர் மாஸ்டர் ஸ்ரீதர். என் வாழ்க்கையில் அவர்தான் எனக்கு குரு. அதே போல கலைத்துறையில் என் தந்தை தான் எனக்கு குரு. ஒரு தடவை எங்க அம்மா கூட என்கிட்ட சொன்னாங்க.
உங்க அப்பா ரொம்ப வருஷமா இவருக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருந்தாருன்னு சொன்னாங்க. அதனாலதான் என்னவோ எங்க கல்யாணத்துக்கு எங்க அப்பா சம்மதிச்சிட்டார். எனக்கு 2 தங்கைகள் 2 தம்பி இருக்காங்க. எல்லாருமே சினிமாவில நடிச்சிருக்காங்க. என் தங்கை ஒருவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரை நாங்கள் சாந்தின்னு வீட்ல கூப்பிடுவோம். எனது கணவரின் தம்பியை தான் என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தோம் ஒரே வீட்டில் இருவரும் மருமகளாக போனோம். எங்கள பாத்துட்டு நிறைய பேர் நீங்க இரட்டை சகோதரிகளே அப்படின்னு கேட்பாங்க என பேபி இந்திரா கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உலா வந்த நபர் ஒருவர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்த 'ஹமீத் அன்சாரி' என்றும்,…
மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…
சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில்…